Tuesday, July 24, 2018

விடுதலைப்புலிகளின் ஆரம்பகால வரலாறு

விடுதலைப்புலிகளின் ஆரம்பகால வரலாறு
வரலாற்று சமர் என்று வர்ணிக்கப்படும் திருநெல்வேலி தாக்குதலில் பங்கு பற்றியோரில் இன்னும் உயிருடன் இருப்போரின் எண்ணிக்கை நான்கில் இருந்து மூன்றாக குறைந்து உள்ளது இந்த தாக்குதலில் 13 இராணுவத்தினர் பலியாகினர் .(தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் அன்றைய இளைஞர்களை வீட்டில் இருந்து வெளியே வரச்செய்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பல்வேறு இயக்கங்களில் இணைந்து கொண்டனர்) இந்தச் சமரில் பங்கு பற்றி ராமு(கந்தசாமி கணேஸ்வரன் )15.6.2017 காலமானார். இரு பிள்ளைகளின் தந்தை இவர். பிரபாகரனின் நேரடி வளர்ப்பு என்று சொல்வார்களே அது இயக்கத்தில் இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி அது அப்படியே இருக்கும் ஒழக்கம் எச்சரிக்கை உணர்வு சிக்கனம் உணவை விரயமாக்காமை முதலான சகலதுமே ராமுவிடம் கடைசி கணம்வரை இருந்தே வந்துள்ளது இவரது மனைவிக்கு ஆறுதல் சொல்லவும் துயரை பகிர்ந்து கொள்ளவும் முன்னால் போராளி ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.எல்லாருடைய பெயர்களையும் (code words ) அவர் எழதி வைத்துதிருந்தார் .எனக்கு அது தெரியாது என்று குறிப்பிட்டு இருந்தார் திருமதி ராமு. இத்தனை வருடம் ஒன்றாக வாழ்ந்து இன்ப துன்பத்தில் பங்குபற்றி இரு பிள்ளைகளுக்கும் தாயான அவருக்கே தெரியாதென்றால் பிரபாகரன் கற்பித்ததை இறுதிவரை கடைபிடித்து இருக்கின்றார் என்றுதானே அர்த்தம். அன்றைய காலகட்டம் பற்றி விபரிப்பதானால் இன்றைய தலைமுறையினருக்கு அதை நம்ப கஷ்டமானதாக இருக்கும் நான்தான் பிரபாகரனுடன் கூட சென்றேன்.இந்த முடிவு எடுக்கும்போது நான் பக்கத்தில் இருந்தேன்.ஆலோசனை சொன்னேன் என்று கற்பனை கலந்த கதைகளை அல்லது வரலாற்றை திரிவுபடுத்தலாக மிகைப்படுத்தலாக எழதிக் குவிப்போர் பலர் வாய் மொழியாகச் சொல்வோர் தொகை பெருகிவிட்டது. அட இவருக்கு எல்லாமே தெரியும்மென்று தம்மை பற்றிய பிரமிப்பை மாயையை அடுத்த தலைமுறையினர் மத்தியில் பதிய வைக்க ஒரு கூட்டமே முயன்று வருகின்றது. அதில் கணிசமானோர் ஊடகவியலாளர்கள் பத்தி எழுத்தாளர்கள் வரலாறு என்பது நடந்து முடிந்தது அதனை எமது விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்ப மாற்ற முயல்வது துரோகம். இயக்க நடவடிக்கைகள் செய்ய உத்தேசித்துள்ள விடயங்கள் அடுத்தவருடைய ஊர்,சொந்த பெயர்,உறவினர் பற்றிய விபரங்கள் கல்விதன்மை சாதி முதலான விடயங்களை ஆராய முற்படக்கூடாது என்பன அடிப்படை விதிகள் ஆகும்.எங்கேயாவது ஒருவர் போலீசாரிடம் சிக்க நேர்ந்தால் சித்திரவதைகளின் கரணமாக ஏனையோரைப்பற்றி விபரங்கள் அவர் அவர் வெளியிட்டக்கூடும்.எனவே ஒருவர் கைதுதானாலும் இயக்க நடவடிக்கைகள் தடங்கலின்றித் தொடர வேண்டும் இதற்காக இயக்கத்துடன் தெடர்புபட்டோரை மிக அவசியமாகின் மட்டுமே வெளிப்படுத்துவார். சம்மந்தபட்ட தேவை முடிந்ததும் அவசியம் இல்லாமல் அவர்களுடன் தெடர்பு கொள்ள கூடாது.உதாரணத்திற்கு 1983/07/15 மீசாலை சுற்றிவளைப்பில் லேப் .சீலனுடன் வீரச்சாவைத் தழவிக்கொண்ட மயிலிட்டியை சேர்ந்த ஆனந்ததை நேரில் சந்திக்காத இயக்க உறுப்பினர் இருந்து உள்ளனர்
(அப்போது இந்த இருவரைத் தவிர பிரபாகரன் (பேபி இளங்குமரன்) செல்லகிளி, ராகவன்,மாத்தையா, பண்டிதர் ,யோகன் (பாதர் )கிட்டு பொன்னம்மான்; ராமு புலேந்திரன், ரகு (குண்டன்) ரஞ்சன், லாலா ,அருணா ,நேசன் அப்பையா, அண்ணா சந்தோசம் ,கேபி (குமரன் பத்மநாதன் ),தேவர் பசீர் காக்கா ,பொட்டு ,ஞானம் கணேஷ் ரெஜி அல்பேட் , ராஜேஷ் , லிங்கம், விக்டர் , சுப்பண்ணா ஆகிய 29 பேர்தான் உலகம் முழுவதும் இருந்த புலிகள் இயக்க முழுநேர உறுப்பினர்கள்.சங்கர் ஏற்கனவே வீரச்சாவு. போதுவாக ஒரு இடத்திற்கு ஒருவர் அல்லது இருவர் எப்போதாவது மூவர் செல்வர். அதுவும் அந்த விடயம் தவிர்க்க முடியாததா என ஆராய்ந்த பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . விதிவிலக்காக நடந்த நிகழ்வுகள் என்றால் 1980 முன்பகுதியில் நீர்வேலி வாய்க்கால் தரையிலும் 1980 ஆகஸ்டில் ஊர் காவல்துறையிலும் நடந்த இரு மாநாடுகளை பற்றி மட்டுமே குறிப்பிடலாம் அப்போதுதான் இதுவரை ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாத முகங்களை பலர் கண்டனர் .(ஏற்கனவே பண்ணைகளில் சிலர் அறிமுகமாகியிருந்தனர்) பிரபாகரன்,செல்லகிளி, ராகவன், ஜோண் பண்டிதர், மாத்தையா , சங்கர் ,ராமு , பொன்னம்மாள், ரகு (குண்டன்) ,குமரன் அன்ரன், சீலன் , புலேந்திரன் ,அய்யர் வாத்தி ;நாகராஜா சந்தன், குமணன் அழகன் ,மனோ மாஸ்டர், நந்தன் சுந்தரம் ;கறுப்பி ,மதி கண்ணண், சிவம் நெப்போலியன், சால்ஸ் பீரிஸ் , டானியல் காந்தன் ,சோமண்ணை ஆகியோர் வாய்க்கால்தரை மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் குறிப்பிட்டத்தக்கவர்கள். பேபி(இளங்குமரன்)கிட்டு , கலாபதி ஆகியோர் தவிர்க்க முடியாத கரணத்தால் இம்மாநாட்டில் கலந்து கொள்ள முடியாமலற் போயிற்று. இந் நிகழ்வுக்கு முன்னதாக இச்சந்திப்பு எவ்வாறு நடைபெறவேண்டுமென திட்டமிட்டார் பிரபாகரன்.ஒரு குறிப்பிட்ட வயதினர் ஒன்று கூடும்போது அயலவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு விடக்கூடாது. சந்திப்பிற்கு முன்னதாக நூலகங்களில் நேரத்தை செலவிடல் போல் வெவ்வேறு பணிகளில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டது. எதுவுமே செய்ய முடியாதவர்கள் சினிமா படம் பார்த்துவிட்டு அந்த இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திகு வரும் வகையில் பிரபாகரன் ஒழங்கு படுத்தினார். எல்லோரையும் அளந்து தானே கையாள வேண்டும் அவர். கிரிக்கெட் விளையாடச் சென்ற இரு குழுக்கள் போல் இயக்க உறுப்பினர்கள் நடந்து கொண்டனர். அந்த வெளியில் உள்ள மர நிழலில் ஆராயப்பட வேண்டிய விடயங்கள் அலசப்பட்டனர். ஆயிரம் சொற்போழிவைகளை விட ஒரு தாக்குதல் வலிமையானது. கூடுதல் பயனை விளைவிக்கும். என கியூபா வரலாற்றுடன் தொடர்புபட்டோர். குறிய கருத்தை ரமு வலியுறுத்தினார்.இவருடைய கருத்தை அன்ரன் வழிமொழிந்தார்.இதற்கு மாறாக மானோ மாஸ்டர் நந்தன் ஆகியோர் மக்கள் புரட்சிக்கு பின்னரே ஆயுத நடவடிக்கை என பல்வேறு நாட்டுச் சித்தாத்தங்களால் கூடி இருந்தோரை வறுத்தெடுத்தனர். இந்த சந்திப்பின் பின் இயக்கம் பல பின்னடைவுகளை சந்தித்தது;உடைந்தது; சிதறியது என்று குறிப்பிடலாம். இந்நிலையில் 1980 ஆகஸ்டில் உறுப்பினரிடையே கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்தவேன லண்டனில் இருந்து ராஜா என்றழைக்கப்படும் ஒருவர் வந்தார். முக்கியஸ்தர்களைச் சந்தித்தார். இதன் பின் அணிகளின் சகல உறுப்பினர்களையும் சந்திக்க ஊர்காவல் துறையில் மாநாடு கூட்டப்பட்டது.இது காலை தொடங்கி நடு இரவு வரை நடந்து முடிவு காண இயலவில்லை .அடுத்த நாள் காலை தொடங்கி மாலை முடிவு முடிவுற்றது. இதில் புலிகளின் மத்திய குழு உறுப்பினர்களாக பிரபாகரன், பேபி, சுப்பிரமணியம் ,ஐயர்,நாகராஜா, ஆகிய நால்வரும் இயக்க வரலாற்றை ஆரம்பத்தில் இருந்து சொன்னார்கள். ஒழங்காற்று நடவடிக்கைகள் விமர்சித்ததும் சாதகமாகவும் முரண்பாடான நிலையில் சிலர் கருத்து தெரிவித்தனர்.பிரபாகரன் அய்யர் ஆகிய இருபர் சார்பிலும் இரு அணிகளாக நிலைப்பாடு எடுத்திருந்தனர். பிரபாகரன் அணியில் பின்வருபவர்கள் கலந்து கொண்டனர். பிரபாகரன் ,பேபி அண்ணா, கலாபதி ராகவன், பண்டிதர் மாத்தையா ,சங்கர், ராமு பொன்னம்மாள், ரகு (குண்டன்),குமரப்பா அன்ரன் ,சீலன் புலேந்திரன், சசி ரத்தினம் , மனோ மாஸ்டர் ,தனி (பல்கலைக்கழகம் ) ஐயர் அணியில் பின் வருபவர்கள் கலந்து கொண்டனர். ஐயர் வாத்தி நாகராஜா சந்தன் குமணன் அழகன் நந்தன் சுந்தரம் கறுப்பி மதி கண்ணண் சிவம் நெப்போலியன் சித்தப்பா எந்த அணியும் சாராமல் காந்தன் செல்லகிளி குலம் ஆகிய மூவரும் கலந்துகொண்டனர். ராஜாவின் கடும் முயற்சியின் பயனாக இரு அணியும் ஒன்றுபட்டதுபோல் காட்டி கொண்டனர் .இறுதியில் மத்திய குழு ஐனநாயக ரீதியில் வாக்கெடுப்பு மூலம் உறுப்பினர் தெரிவு செய்யப்படுவார் என முடிவாயிற்று. நடுநிலைமை வகித்தவர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.27 வாக்குகள் பெற்று சாந்தன் முதல் இடத்திலும் 26 பேரில் ஆதரவு பெற்று அன்ரன் இரண்டாவது இடத்திலும் 25 உறுப்பினர்களின் ஆதரவு பெற்று பிரபாகரன் மூன்றாவதாக தெரிவானர் .அய்யர் 10 க்கும் குறைவான வாக்கு பெற்று தெரிவாகினார் . வரலாறு செயல்திறனுள்ளவர்களுக்கே உரிய இடத்தை கொடுத்தது. வேறு வழிகளில் முதல் இடத்தை பெற்றவர்கள் சாதனையாளர்கள் என்று வரலாற்றில் பதியப்படவில்லை மூன்றாவது இடத்தை பெற்ற பிரபாகரனுக்கே செயல்திறன் இருந்தது. பாரதியார் வாழ்விலும் இதே நிகழ்வு நடந்தது மதுரை சேதுபதி பள்ளியில் அவர் ஆசிரியராக பணிபுரிந்துகொண்டு இருந்தார். அக்கால கட்டத்தில் ஒரு கவிதைப் போட்டி நடைபெற்றது .இதற்கு செந்தமிழ் நாடேனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுதே காதினிலே என்ற கவிதையை அவர் அனுப்பி வைத்தார் .இக்கவிதை எளிதில் விளங்க கூடியதாக இருக்கின்றதே என்று எண்ணிய நடுவர்கள் போனால் போகின்றது மூன்றாம் பரிசுக்கு அதனை தெரிவு செய்தனர். முதல் இரு பரிசு பெற்ற கவிதைகள் மக்களை சேரவில்லை .அவை காலத்தால் காணாமல்போகின.அது போல செயல்திறனுள்ள பிரபாகரனை வரலாறு தத்தெடுத்துக்கொண்டது. ஓட்டு போட்ட ஐக்கியம் நிடிக்கவில்லை மனதளவில் மற்றம் வராவிட்டால் செயலிலும் எதனையும் காணமுடியாது ஐயர் குழுக்கு போராட்டம் பற்றிய நம்பிக்கை வலுக்காததால் வரலாற்றில் இருந்து தூக்கி ஏறியப்பட்டனர். 1977-198 பிளவு ஏற்படும்வரை புலிகள் அமைப்பில் அநேகர் இணைந்தனர். வன்னியிலும் கிழக்கிலும் மறைமுக பண்ணைகள் இருந்தன.இதில் வந்தவர்கள் பண்ணை வாழ்கையை எதிர்கொள்ள முடியாமல் ஒதுங்கி கொண்டவர் பலர். முதலில் வவுனியா பூந்தோட்டம் பன்றிக்கெய்தகுளம் அடுத்தகட்டம் வள்ளிபுனம் ,மாங்குளம் (அம்பகாமம்) முத்தையன் கட்டு மன்னாரில் முருங்கன் பின்னர் பன்னாலை கோழிப்பண்ணை இதுதான் முதலில் யாழில் அமைக்கப்பட்டது)மட்டகளப்பில் புலிபாய்ந்தகல் செங்கல்வாடி (யோகன் பாதர்) மற்றும் மியான்கல்குளம் பண்ணைகளுடன் திருமலையிலும் ஒரு பண்ணை இருந்தது. 1980 பிற்பகுதியில் ரேலோ இயக்கம் புலிகளுடன் இணைந்து செயல்பட்டன.1981 இல் குட்டி மணி தங்கதுரை ஜேகன் கைதானதைத் தொடர்ந்து மிக நெருக்கடி ஏற்பட்டது. ஒரு இரவு படுப்பதற்காக அறிமுகப்படுத்திய இடங்களுக்கும் இராணுவம் படையினர் விரைந்தனர். 100 ரூபாய்தான் அன்றைய காலத்தில் மிக அதி கூடிய பெறுமதி நீர்வேலியில் வைத்து வண்டி தொடரை மறித்து கைப்பற்ற பட்ட பணத்தில் மிக பெரும்பாலானவை இரண்டு ரூபாய் முதலானவைகளே அவற்றை பகுதிகளாக பிரித்து வைக்கப்பட்டு இருந்தது. இந்த மறைவிடங்களுக்குச் சோதனை வந்தது சிலர் கைதாக நேர்ந்தது அவ்வாறு இருந்தும் மூன்று லட்சம் தவிர மற்றவற்றை இடம் மாற்றி விடப்பட்டது.மறைவிடத்தை விட்டு பணத்தை எடுத்ததும் அங்கே படையினர் சென்றமை கிளித்தட் டு விளையாட்டைப்போல நடந்துகொண்டு இருந்தது .சிறிய தள்ளுவண்டியில் ஒருவர் பணத்தை வைத்து தள்ளிக்கொண்டு போனாபோது அவரை படையினர் வாகனம் விலத்திச் சென்றது. தேவைப்படுவோர் தொகை அதிகரித்தது வறுவா, சின்னவறுவா பொன்னம்மான் தேவர் அண்ணா நேசன் (ரவிந்திரதாஸ்)கேபி (பத்மநாதன்)கிட்டு என பலர் இப் பட்டியலில் சேர்ந்தனர். இக்காலப்பகுதில் யாழ் காங்கேசன்துறை வீதியில் சீலன் தலைமையில் புலிகள் இயக்க உறுப்பினர்கள் படையினர் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.இரு படையினரும் அவர்களுடன் கூட வந்த ஒருவரும் பலியாகினர் . 303 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டது.இந்நிலையில் தற்காலிகமாக இந்தியாவில் தங்குவதேனமுடிவாயிற்று .தேடப்படுவோர் படகு மூலமாகவும் செல்வதெனவும் ஏனையோர் விமானமூலம் செல்வதேனவும் முடிவாயிற்று .டேலோவின் சுதன் இவ்வாறு சென்றார் புலிகளின் ராமு விமானம் மூலம் சென்ற ஒருவராக இருந்தார். தமிழத்தின் திருப்பரங் குன்றத்தில் சரவணப்பொய்கைக்கு எதிரில் இருந்த திருமணமண்டபத்தில் இரு இயக்கத்திற்குமான உடல் பயிற்சிகளும் வகுப்புகளும் நடைபெற்றனர்.உடற்பயிற்சிகளை ராகவன் வழங்கினார்.வகுப்புகளை ராமுவே வழி நடத்தினார். இக்காலப்பகுதில் 1982 தைப்பொங்கல் நாளன்று சுதந்திர தமிழிழத்தைப் பிரகடனப்படுத்தப்போவதாக கிருஷ்ண வைகுந்தவாசன் அறிவித்தார்.போராட்டத்தைய மலினப்படுத்தும் இம் முயற்சியை எதிர்த்து நாடுகடத்தப்பட்ட நிலையில் தமிழீழ அரசு என்றோரு துண்டுபிரசுரத்தைப் புலிகள் வெளியிட்டனர். அதே போல சுத்தரம் மீதான ஒழங்காற்று நடவடிக்கை குறித்து துரோகத்துக்குப்பரிசு என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் வெளியானது புலிகளின் இலச்சினைகளுடன் வெளியிடப்பட்ட இவ்விரு துண்டுப்பிரசுரங்களையும் ஸ்ரீசாபரத்தினம் முதலானோர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வந்தனர். அப்போது புலிகளின் தீவிர ஆதரவாளனாக இருந்த பொட்டு ஞானம் ஆகியோர் இவற்றை மக்களிடையே விநியோகித்தனர். சில மாதங்கள் பின்பு இரு இயக்கமும் தனி தனியாக இயங்குவதென முடிவுவாயிற்று.குட்டி மணி தங்கதுரை போராளிகளை கொழும்பில் தற்கொலை தாக்குதல் மேற்கொண்டேனும் மீட்போம் பிரபாகரன் தெரிவித்த கருத்தைப் பரிசீலிக்க டெலோவினரான ராசப்பிள்ளை,ஸ்ரீசாபரத்தினம் ஆகியோர் தயராக இல்லை வழக்கு விசாரணை கொண்டு வரப்படும் சமயத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வோம் என பிரபாகரன் தெரிவித்து இருந்தார்.திட்டத்தை செயல்படுத்தத் தயராக இல்லாதவர்களுடன் இணைந்து பணிபுரிவது கடினம் என்றும் முன்புபோல் தனித்தே இயங்க வேண்டுமெனவும் பிரபாகரன் மனதில் தோன்றியது.தொடர்ந்து முரண்பாடுகள் முற்றின. இறுதியாக ஜேயம் எனப்படும் முன்னால் டெலோ உறுப்பினர் ஒருவர் மீது தன்னிச்சையாக டேலோவினர் நடவடிக்கை எடுத்ததை தெடர்ந்து .தனித்து இயக்கும் தமது முடிவை அறிவித்தார் பிரபாகரன். ஒன்றாக இருந்து பிரச்சினைபடுவதை விட பிரிந்து நண்பர்களாக இருப்போம் என சொன்னார் அவர். அடுத்த நடவடிக்கை பற்றி ஆராயவும் விமானம் மூலம் செல்வோரை முதலில் அனுப்பவும் பிரபாகரன் தீர்மானித்தார் .சென்னைக்கு சென்ற பிரபாகரன் ராமுவை அங்கு அழைத்தார்.ஒரு நாள் மாலை பாரிமுனைக்கு போன அவர் The commados படம் பார்த்துவிட்டிர்களா ?எனக்கேட்டார் .இல்லை என்று ராமு சொன்னதும் நான் நேற்றுதான் பார்த்தேன் .இன்றுதான் கடைசிநாள் எனக்கூறி அவருடன் இன்னோரு உறுப்பினரை அனுப்பி வைத்தார் . பிரபாகரனுடன் ராகவன் நேசன் சென்றனர் .படம் பார்த்துவிட்டு ராமு திரும்பி வரும்போது வழியில் சந்தித்த நேசன் பாண்டிபஜாரின் முகுந்தன் (உமாமகேஸ்வரன் )கண்ணண் ஆகியோருடன் தம்பியும் (பிரபாகரன்) ராகவனும் துப்பாக்கி சமரில் ஈடுபட்டனர் அவ்விருவரையும் பொதுமக்கள் பிடித்து பெலிசாரிடம் ஒப்படைத்தனர்.என்னை இனம் கண்டு துரத்திய மக்களிடம் இருந்து நான் தப்பியதே பேரும் பாடாகிவிட்டது எனக்கூறினார். மூவரும் மைலாப்பூரில் தங்கியிருந்த இடத்திற்கு சென்றனர். தானும் நேசனும் அங்கிருந்ததிற்காக தடயங்களை அழித்து வருவதாகவும் உடனடியாக விமானம் மூலம் மதுரைக்கு சென்று திருமணமண்டபத்தில் தங்கியிருக்கும் அனைவரையும் இடம் மாற்ற ஏற்பாடு செய்யுமாறு பேபி அண்ணாவுக்குச் (இளங்குமரன் ) சொல்லுமாறு மற்ற உறுப்பினர்களை பணிந்தார்.அப்படியே கருமங்கள் நடந்தன. விமானம் மூலம் சென்றோர் நாட்டுக்கு திரும்பினர். அடுத்து நடக்க வேண்டிய விடயங்களை இளங்குமரன் கையாண்டர். தமிழக முதல்வர் எம். ஜி. ஆர் இவர் எதிர் பார்த்த அனைத்தையும் நிறைவேற்றினார்.நாடு திரும்பிய ராமுவின் நேரடி களமான நெல்லியடியில் நடந்த பெலிஸார் மீதான தாக்குதல் அமைந்தது இதில் நான்கு பொஸிஸார் பலியாகினர்.சங்கர் இந்த தாக்குதலுக்கு தலைமை தாங்கினார் .மாத்தையா அருணா ரகு(குண்டன்)சந்தோசம்,பசீர் ஆகியோர் இத் தாக்குதலில் பங்கு பங்குபற்றினர் . தொடர்ந்து காரைநகரிலிருந்து வந்த கடற்படையினரின் வாகன தொடர் அணி மீதான தாக்குதல் முயற்சி நடந்தது இதில் சீலன் தலைமை தாங்கினார் அப்பையா அண்ணா சங்கர் அருணா மத்தையா ரகு (குண்டன்) பசீர் ஆகியோரும் இத் தாக்குதலில் பங்கு பற்றினர். சாவகச்சேரி பொலிஸ் நிலைய தாக்குதலில் சீலன் தலைமையில் இந்த தாக்குதல் ரகு (குண்டன் ) ராமு புலேந்திரன் மாத்தையா அருணா சங்கர் சந்தோசம் ரஞ்சன் லாலா பசீர் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து பொன்னம்மான் தலைமையில் உமையாள் புரத்தில் நிகழ்ந்த இராணுவ அணி மீதான தாக்குதலில் ராமு, அப்பையா அண்ணா, கிட்டு ,ரஞ்சன் மாத்தையா, அருணா, சந்தோசம் ,பசீர் கணோஷ் ,ராஜேஷ், செல்லக்கிளி ஆகியோர் பங்கேற்றனர். 1983 முன்பகுதியில் புதிய போராளிகளுக்கான பயிற்சி முகாம் ஒன்று உடையார்கட்டு இருட்டுமடுவில் அமைக்கப்பட்டது.இதில் பிரபாகரன் ,செல்லகிளி, பொன்னம்மான், சீலன் புலேந்திரன், கிட்டு ரஞ்சன் லாலா, ராமு ஆகியோர் பயிற்சி வகுப்புகள் நடத்தினர்.யோகன்(பாதர்) ,அருணா,பொட்டு ,ஞானம் ,ராஜேஷ் ,விக்,டர் ,ரெஜி, லிங்கம், சுப்பண்ணா, அல்பேர்ட்,ஆனந்,ஆகியோர் இம் முகாமில் பயிற்சி பெற்றனர். ய திருநெல்வெலியில் நடந்த வரலாற்றுச்சமரில் செல்லக்கிளி தலைமையில் நடைபெற்ற இத் தாக்குதலில் பிரபாகரன் கிட்டு பொன்னம்மான் புலேந்திரன் சந்தோசம் ரஞ்சன் லாலா அப்பையா அண்ணா லிங்கம் பசீர் காக்கா ஞானம் விக்டர் ராஜோஷ் சுப்பண்ணா கணேஷ் ரேஜி ஆகியோர் பங்கேற்றனர்.மட்டகளப்பு சம்மந்தமான விடயங்களை கையாண்டவர் மட்டு சிறையுடைப்பு தொடர்பாக ஈ.பி .ஆல்.எல் வினர் தொடர்பு கொண்டு ஆயுதங்களை தருமாறு கோரினர். இவர் ஒரு போராளி என சத்தியம் செய்தாலும் ஒருவரும் நம்ப மாட்டார்கள் இவரது உருவமைப்பு அவ்வாறு இருந்தமைக்கு இவருக்கு ஒரு பலமாக இருந்தது. படையினர் போராளிகள் குறித்து வைத்து இருக்கும் பிம்பம் இவருடைய உருவத்திற்கு பொருந்தாது.ஒரு முறை மட்டகளப்பு சென்ற பேருந்து அனுராதபுரத்தில் விபத்துக்குள்ளானது. இதில் இவரும் காயம் முயற்றார். சிங்களமும் தெரியாது எப்படியோ ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறி மட்டகளப்புக்கு சென்றார் இவர் மட்டகளப்பில் ஆற்றிய பணிகள் குறித்து என் தம்பி ஜேயத்திற்கு என்ற நூலில் கவிஞர் காசி ஆனந்தன் குறிப்பிட்டு உள்ளார். ஓட்டி சுட்டான் பொலிஸ் நிலைய தாக்குதலிலும் ராமுவின் பங்கு இருந்தது மாத்தைய தலைமையில் நடந்த தாக்குதலில் பசீர், பரமதேவா, சந்தோசம் , குட்டி ,பசீலன் , சசி வசந்தன் ,சகோதரம், தீசன் ,கோபி மான வள்ளல் ,லோரன்ஸ் சபா ,ரெஜி ,லலித் ,பாபு உட்பட பலர் பங்கேற்றனர். இயக்கத்தில் இருந்து விலகினாலும் அதே நடைமுறை பழக்கம் பழக்கங்களுடன் தனது மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார் சரித்திரத்தில் ராமுவுற்கும் தனி இடம் உண்டு அதை பதிவு செய்ய வேண்டுமென்பதற்கான ஒரு முயற்சியின் ஆக்கமே

No comments:

Post a Comment